/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிகாரி போல் நடித்து பணம் பறிப்பு கடை உரிமையாளர்கள் அதிருப்தி
/
அதிகாரி போல் நடித்து பணம் பறிப்பு கடை உரிமையாளர்கள் அதிருப்தி
அதிகாரி போல் நடித்து பணம் பறிப்பு கடை உரிமையாளர்கள் அதிருப்தி
அதிகாரி போல் நடித்து பணம் பறிப்பு கடை உரிமையாளர்கள் அதிருப்தி
ADDED : டிச 28, 2024 02:07 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்-தியுள்ளது.
ராசிபுரம் அடுத்துள்ள பட்டணம் டவுன் பஞ்.,ல், 10க்கும் மேற்-பட்ட மளிகை கடைகள் உள்ளன. புதுப்பட்டி சாலையில் மளிகை கடை ஒன்று உள்ளது. இதில், நேற்று முன்தினம் மாலை, 50 வயது மதிக்கத்தக்க நபர் கடைக்குள் புகுந்து தான் உணவுபாது-காப்புதுறை அதிகாரி என்றும்; தன் பெயர் செந்தில்குமார் எனவும் கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்கப்படுவதாக புகார் வந்-துள்ளது என கூறிக்கொண்டே சோதனையிட தொடங்கினார். கடையில் எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும், கலெக்டரிடம் புகார் வந்துள்ளது. எனவே கடையை, 'சீல்' வைக்க சொல்லியுள்ளார் என, கூறியுள்ளார். உரி-மையாளர் பயப்படுவதை பார்த்ததும், பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். புகார் மனுவை முடித்து வைக்க, 30,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடையை, 'சீல்' வைக்க நேரிடும் எனக்கூறியுள்ளார். இதில், நடந்த பேரத்தில், 10,000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, அங்-குள்ள பொட்டுகடலை, மசாலா பாக்கெட்டுகள் என மளிகை பொருட்களையும் தேவையான அளவிற்கு எடுத்துச்சென்று-விட்டார்.
இதேபோல், சிறிய கடைகளிலும் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். இந்த நபர் குறித்து விசாரித்த போது, அவர் போலி-யானவர் என்பது தெரிந்தது. இதனால் போலி அதிகாரி வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து கடை உரி-மையாளர்கள் கொடுத்த புகார்படி, ராசிபுரம் போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.

