/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
/
புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
ADDED : மே 05, 2025 02:58 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஆத்துார் சாலை, தட்டான்குட்டை சாலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ் தலை-மையில் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தட்டான்குட்டை சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடையில் இருந்த, 400 கிராம் எடையுள்ள புகை-யிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்காரர்களுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்-பட்டது. ஆய்வாளர் கோவிந்தராஜன், மேற்பார்வையாளர் பன்னீர்-செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.