/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கேரி பேக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
/
கேரி பேக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
ADDED : டிச 06, 2024 07:35 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில், சேர்மன் கவிதா, கமிஷனர் கணேசன் ஆகியோர் தலைமையில் கடைவீதி, சின்ன கடைவீதி, பட்டணம் ரோடு, புதுப்பாளையம் ரோடு, பூக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் நகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
தட்டுகள், கேரி பேக்குகளை கைப்பற்றிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ராசிபுரத்தில் ஆய்வின் போது, 75 கிலோ கேரி பேக்குகள் பறிமுதல் செய்ததுடன், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது, துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜன் உடனிருந்தனர்.