/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாரம்பரிய கலை மீட்டெடுக்க சிலம்பக்கலை விழிப்புணர்வு
/
பாரம்பரிய கலை மீட்டெடுக்க சிலம்பக்கலை விழிப்புணர்வு
பாரம்பரிய கலை மீட்டெடுக்க சிலம்பக்கலை விழிப்புணர்வு
பாரம்பரிய கலை மீட்டெடுக்க சிலம்பக்கலை விழிப்புணர்வு
ADDED : ஜன 02, 2025 01:22 AM
நாமக்கல், ஜன. 2-
பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் வகையில், நாமக்கல் பூங்கா சாலையில் சிலம்பக்கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட சிலம்ப ஆசான்கள், பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, பாரம்பரிய கலையான சிலம்பக்கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாமக்கல் பூங்கா சாலையில் நடந்தது.
சிலம்ப ஆசான்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரகுமார் வரவேற்றார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் கபிலன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதில், மூத்த ஆசான்கள் பங்கேற்ற புலி ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடந்தது.மேலும், பிளாஸ்டிக்கை அகற்ற வேண்டும்; துணிப்பை பயன்படுத்த வேண்டும் என, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சர்வம் அறக்கட்டளை ரம்யா, மாவட்ட சிலம்ப ஆசான்கள் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், மாரிமுத்து, பாண்டியன், சங்கர், சந்துரு, வெங்கட்ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மாவட்ட
செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் ஸ்ரீனிவாசன் செய்திருந்தனர்.

