ADDED : ஜன 13, 2024 03:51 AM
தார்ச்சாலை பணிக்குஅமைச்சர் பூமி பூஜைவெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி பகுதியில் இருந்து ராசிபுரம் நகராட்சி எல்லை வரை, நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டு திட்டத்தில், 3.30 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அகலப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை, நேற்று நடந்தது.
ஒன்றிய அட்மா குழு தலைவர் துரைசாமி தலைமை வகித்தார்.அமைச்சர் மதிவேந்தன், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், தேங்கல்பாளையம் பஞ்., துணைத்தலைவர் தமிழ்மணி, மாவட்ட நெசவாளர் அணி துணைத்தலைவர் ரவி, ராசிபுரம் சட்டசபை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவீந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.சி.ஐ.டி.யு., போராட்டம்குமாரபாளையம்,: குமாரபாளையத்தில், சி.ஐ.டி.யு., சார்பில், 20 சதவீதம் போனஸ் கேட்டு, தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் போனஸ் வழங்க, அரசு சார்பில் அரசாணை இட்டு உத்தரவாதம் செய்கிறது. ஆனால், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இதுவரை போனஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 20 சதவீதம் போனஸ் கேட்பது என முடிவு செய்து, இரு நாட்களுக்கு முன் தெருமுனை பிரசாரம் நகரம் முழுதும் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், இதே கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், கோரிக்கை மனுவை, தாசில்தார் சண்முகவேலிடம் வழங்கினர். மாவட்ட செயலர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன், நகர செயலாளர் பாலுசாமி, நகர பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.