ADDED : ஜன 28, 2025 07:01 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 438.200 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 700 ரூபாய், குறைந்தபட்சம், 560 ரூபாய், சராசரி, 669 ரூபாய என, 438.200 கிலோ பட்டுக்கூடு, 2.93 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ராசிபுரத்தில் வழக்கமாக பட்டுக்கூடு அதிகபட்சம், 680 ரூபாய் வரை விற்று வந்தது. ஆனால், நேற்று அதிகபட்சமாக, 700 ரூபாய்க்கும், சராசரி விலை, 669 ரூபாய்க்கும் விற்றது.
இதுகுறித்து, பட்டுக்கூடு விவசாயிகள் கூறியதாவது: கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் பனப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், பட்டுப்புழு சாப்பிடும் மல்பெரி இலை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டுக்கூடு வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் பட்டுக்கூடு விலை கனிசமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

