/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
/
செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
ADDED : ஜூலை 05, 2025 01:51 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரி துவங்கி, 25ம் ஆண்டை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார் வரவேற்றார். பொருளாளர் தனசேகரன், செயல் இயக்குனர் அரவிந்திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் பாலதண்டபாணி, 'செங்குந்தர் பொறியியல் கல்லுாரி, தரமான தொழில்நுட்ப கல்வியில் முன்னணியில் உள்ளது
. கல்லுாரியின் பயண வரலாற்றையும், எதிர்கால நோக்கங்களையும் நினைவுபடுத்தி கல்லுாரி துவக்கம் முதல், 25 ஆண்டுகளாக கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர் பழனிசாமி உள்ளிட்ட மூத்த பேராசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, பாராட்டி வாழ்த்தி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, வெள்ளி விழா அடையாள சின்னம் வெளியிடப்பட்டது. கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.