/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிரினிடி மகளிர் கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
/
டிரினிடி மகளிர் கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
டிரினிடி மகளிர் கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
டிரினிடி மகளிர் கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
ADDED : மார் 05, 2025 06:24 AM
நாமக்கல்: நாமக்கல் - மோகனுார் சாலையில், டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி அமைந்துள்ளது. இக்கல்லுாரியின், 25-வது வெள்ளி விழா, நாளை தொடங்கி, மூன்று நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி, சேலம்- பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், சட்டீஸ்கர் மாநில கலால் துறை செயலர் மற்றும் கமிஷனர் சங்கீதா.தமிழக காவல் துறை கூடுதல் இயக்குனர் வனிதா, சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் கவிதா ராமானுஜன், கலைமாமணி விருதாளரும், ஊடகவியலாளருமான நிர்மலா பெரியசாமி, திரைப்பட இயக்குனரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார், நாமக்கல் ஆடிட்டர் ராகவி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மேலும், கலெக்டர் உமா, சட்டீஸ்கர் மாநில கலால் துறை செயலர் மற்றும் கமிஷனர் சங்கீதா, நாமக்கல்- பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், செல்வம் கல்வி நிறுவனங்களின் செயலர் கவீத்ரா நந்தினி, பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாரதாமணி ஆகியோருக்கு, 'டிரினிடி - சாதனை பெண்மணி விருது' வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை, கல்லுாரி தலைவர் நல்லுசாமி, செயலாளர் செல்வராஜ், செயல் இயக்குனர் அருணா செல்வராஜ், முதல்வர், பேராசிரியர்கள், மாணவியர் செய்து வருகின்றனர்.