குடிநீர் பிரச்னை தீர்ப்பதில் மெத்தனம்: மக்கள் முற்றுகை
குடிநீர் பிரச்னை தீர்ப்பதில் மெத்தனம்: மக்கள் முற்றுகை
ADDED : ஆக 16, 2026 06:13 AM

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
பஞ்., யூனியன், எலந்தகுட்டை பஞ்., சார்பில் ரங்கனுார் பகுதியில்,
நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது
கூட்டத்தில், கலந்து கொண்ட
பெரும்பாலானோர், குடிநீர் சீராக வருவதில்லை; அப்படியும் குடிநீர்
வந்தால், 10 நிமிடம் தான் வருகிறது. பஞ்., அலுவலகத்தில் பல முறை
சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேவையான குடிநீர் வழங்க
வேண்டும் என, அதிகாரிகளிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.
ஒரு கட்டத்தில், அதிகாரிகளை முற்றுகையிட்டனர். கூட்டத்தில்
கலந்துகொண்ட பொதுமக்கள் கூறியதாவது: குடிநீர் முறையாக
வருவதில்லை. மக்களை மக்களாக பார்க்க வேண்டும். கட்சியாக பார்க்க
கூடாது. நேற்று முன்தினம் மட்டும், இரண்டரை மணி நேரம் எப்படி தண்ணீர்
வந்தது. மற்ற நாளில் ஏன் தண்ணீர் வருவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
