ADDED : ஜூலை 07, 2026 05:54 AM
குமாரபாளையம்; குமாரபாளையம் அருகே, தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குப்பாண்-டபாளையம் பஞ்., பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்-ளிக்கு சென்றனர். காலை, 11:00 மணிக்கு இடை-வேளை நேரத்தில் சிறுநீர் கழிக்க, மாணவர்கள் கழிவறைக்கு சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனை பாம்பு கடித்துள்ளது.
இதுகுறித்து, சிறுவன் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக பள்ளி வாகனம் மூலம் பல்லக்காபாளையத்தில் செயல்படும் தனியார் விஷ முறிவு சிறப்பு மருத்-துவமனையில் மாணவனை சிகிச்சைக்கு சேர்த்-தனர். அங்கு மாணவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு வந்-தனர். பத்தாம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்த தகவல், குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்-தவுடன், மருத்துவமனை விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
