/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சில வரி செய்திகள்: நாமக்கல் மாவட்டம்
/
சில வரி செய்திகள்: நாமக்கல் மாவட்டம்
ADDED : மே 01, 2024 01:36 PM
அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்: சித்திரை செவ்வாய்கிழமையையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
341 கிலோ பட்டுக்கூடு ரூ.1.32 லட்சத்துக்கு ஏலம்
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 341.660 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 470 ரூபாய், குறைந்தபட்சம், 200 ரூபாய், சராசரியாக, 391.52 ரூபாய்க்கு விற்பனையானது. 341.660 கிலோ பட்டுக்கூடு, 1.32 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.51 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
நாமக்கல்: நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 51 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. நாம க்கல் -- திருச்செங்கோடு சாலையில் செயல்படும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 2,050 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில், ஆர்.சி.எச்., ரக பருத்தி குவிண்டால், 7,290 ரூபாய் முதல், 8,120 ரூபாய், கொட்டு மட்ட ரகம், 4,929 ரூபாய் முதல், 6,089 ரூபாய் என, மொத்தம், 51 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
ரூ.75 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. நேற்று, 770 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,469 ரூபாய்க்கும், அதிகபட்சம், 20,999 ரூபாய்க்கும்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,829 ரூபாய்க்கும், அதிகபட்சம், 18,169 ரூபாய்க்கும்; பனங்காலி ரகம் குறைந்தபட்சம், 5,569 ரூபாய்க்கும், அதிகபட்சம், 29,512 ரூபாய்க்கும் விற்பனையானது. விரலி, 500, உருண்டை, 200, பனங்காலி, 70 என, 770 மூட்டை மஞ்சள், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.