/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் ஓடையாக மாறிய சோமேஸ்வரர் வாய்க்கால்
/
கழிவுநீர் ஓடையாக மாறிய சோமேஸ்வரர் வாய்க்கால்
ADDED : நவ 02, 2024 01:02 AM
சேந்தமங்கலம், நவ. 2-
பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பி வருவதால், சோமேஸ்வரர் குளத்திற்கு செல்லும் வாய்க்காலை துார்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சேந்தமங்கலத்தில் பழமை வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் தெப்பகுளம் உள்ளது. இந்த குளத்தில், கடந்த, 50 ஆண்டுக்கு முன்பு வரை, சோமேஸ்வரர் தெப்ப திருவிழா நடந்து வந்தது.
இந்த குளத்திற்கு, கொல்லிமலையில் கனமழை பெய்யும்போது, மழைநீர் பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பி, வாய்க்கால் வழியாக சோமேஸ்வரர் கோவில் தொப்ப குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் பாதை உள்ளது. இந்த வாய்க்காலை, கடந்த, 40 ஆண்டுகளாக முற்றிலும் துார்வாராமல் விட்டதாலும், ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும், பொம்மசமுத்திரம் ஏரியில் இருந்து மழைநீர் வரும் வாய்க்காலில், தண்ணீர் வராமல் நின்றது. பின், காலப்போக்கில் இந்த வாய்க்கால் கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறியதால், துர்நாற்றம் வீசி வருவதுடன் மாசடைந்துள்ளது.
எனவே, தற்போது கொல்லிமலையில் இருந்து பொம்மசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் வருவதால், இந்த வாய்க்காலை துார்வாரி, சோமேஸ்வரர் தெப்ப குளத்திற்கு தண்ணீர் செல்ல டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிகை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

