புதிய டிரான்ஸ்பார்மரால் வோல்டேஜ் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு
புதிய டிரான்ஸ்பார்மரால் வோல்டேஜ் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு
ADDED : அக் 06, 2026 05:48 AM
ராசிபுரம்; ராசிபுரம், கவுண்டம்பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி, நேற்று நிறைவடைந்தது.
ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி-களில், கடந்த சில மாதங்களாக மின் வினியோ-கத்தில் அடிக்கடி பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக, நகர் பகுதிகளில் உள்ள குடியி-ருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் திடீரென அதிகளவில் மின் அழுத்தம் ஏற்பட்டு வந்தது. இதனால் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த, 'டிவி', பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மின்விசிறி உள்ளிட்ட விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் அடுத்தடுத்து பழுத-டைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதுகு-றித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மின்-வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, மின் அழுத்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மின் வாரியம் சார்பில் கவுண்-டம்பாளையம் பகுதியில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில், 25 எம்.வி.ஏ., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ திட்டமி-டப்பட்டு அதற்கான பணிகள் துவங்கின. கடந்த சில வாரங்களாக நடந்து வந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள், நேற்று முழுமையாக நிறைவடைந்தது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறு-கையில், ''25 எம்.வி.ஏ., கூடுதல் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து இணைப்பு பணிகளும் நேற்-றுடன் நிறைவடைந்தன. சில தினங்களில், சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்-டுள்ளோம். இந்த புதிய டிரான்ஸ்பார்மர் பயன்-பாட்டிற்கு வரும் பட்சத்தில், மின்தடை மற்றும் மின்னழுத்த பிரச்னை முற்றிலும் முடிவுக்கு வரும்,'' என்றனர்.
