ADDED : ஆக 24, 2025 12:45 AM
நாமக்கல், சேந்தமங்கலம் பகுதிகளில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை சந்தித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதை குறித்தும், அவர்களது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் அருந்துவதால் உடல்நிலை பாதித்து, மரணம் கூட ஏற்படக்கூடும் என்றும், குடும்பத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகள் பற்றியும், கள்ளச்சாராயம் விற்பது, காய்ச்சுவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு, அரசு அறிவித்துள்ள சன்மானம் பெற்றுத்தரப்படும் என்றும், எஸ்.பி., விமலா கூறினார். தொடர்ந்து, அனைத்து வகையான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, போலீசாருடன் ஆய்வு மேற்கொண்டார்.

