ADDED : மார் 21, 2024 02:23 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம், குமாரபாளையம், நாராயண நகர் பகுதியில் செயல்பட்டு வரும், 'இல்லம் தேடி கல்வி' மையத்தில், விடியல் ஆரம்பம் சார்பில் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்து பேசுகையில், ''சிட்டுக்குருவிகள் தாகம் தீர்க்க மாணவ, மாணவியர் தண்ணீர் வைக்க வேண்டும்; சிறுதானியங்கள் வைத்து காக்க வேண்டும்,'' என அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக பேச்சு, ஓவிய போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவ மாணவியர் சிட்டுக்குருவிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைப்போம் என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் காயத்ரி, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
