/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 31, 2025 12:46 AM
நாமக்கல்,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். அதில், முன்னேற்பாடுகள், பயிற்சி, அச்சடித்தல், கணக்கீட்டிற்கான காலம், ஓட்டுச்சாவடி நிலையங்களை மறுசீரமைத்தல், திருத்தியமைத்தல், கட்டுபாட்டு அட்டவணையை மேம்படுத்தல் மற்றும் வரைவு பட்டியலை தயாரித்தல், வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடும் நாள், ஏற்புரை மற்றும் மறுப்புரை விண்ணப்பிக்கும் காலம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்தும் கேட்டறியப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடத்திட, அனைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், வாக்காளர் பதிவு அலுவலர்களான வருவாய் கோட்டாட்சியர்கள் லெனின், சாந்தி உட்பட அனைத்து தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதி
நிதிகள் பங்கேற்றனர்.

