/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
24,000 வெற்றிலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
/
24,000 வெற்றிலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
24,000 வெற்றிலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
24,000 வெற்றிலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
ADDED : ஆக 13, 2025 05:46 AM
ராசிபுரம்: ராசிபுரம், பெரிய கடைவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற இரட்டை விநாயகர் கோவில் உள்ளது. நேற்று, மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, இரட்டை விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின், 24,000 வெற்றிலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சங்கடஹர சதுர்த்தி அன்று வெற்றிலை அலங்காரத்தில் இரட்டை விநாயகரை வணங்கினால், குழந்தைகளின் கல்வி வளர்ச்சி அடையும், தொழில் சிறப்படையும், திருமணத்தடை அகலும், என்பதால் ஏராளமான பக்தர்கள் விநாயகரை வணங்கி சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.