/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவ, மாணவியருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் 40 பேருக்கு உயர்கல்வியில் சேர ஆணை வழங்கல்
/
மாணவ, மாணவியருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் 40 பேருக்கு உயர்கல்வியில் சேர ஆணை வழங்கல்
மாணவ, மாணவியருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் 40 பேருக்கு உயர்கல்வியில் சேர ஆணை வழங்கல்
மாணவ, மாணவியருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் 40 பேருக்கு உயர்கல்வியில் சேர ஆணை வழங்கல்
ADDED : ஜூலை 23, 2025 01:45 AM
நாமக்கல், மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு உயர் கல்வியில் சேர்வதற்கான ஆணையை, கலெக்டர் துர்கா மூர்த்தி வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில், 2023-24, 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் அனைவரையும் உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்ய, கலெக்டர் தலைமையில், கல்லுாரி கனவு, உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004251997, வாட்ஸாப் எண்: 9788858794) சிறப்பு குறைதீர் முகாம் என, பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாமில், உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், பொருளாதாரம் உட்பட பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெறுகின்றனர். அதன்படி, பல்வேறு பள்ளிகளில் பயின்ற, 93 மாணவ, மாணவியர், சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டனர்.
அதில், தகுதி வாய்ந்த, 21 பேருக்கு, அரசு கலை கல்லுாரியிலும், 12 பேருக்கு, தொழிற்பயிற்சி நிலையங்களிலும், ஏழு பேருக்கு, பாலிடெக்னிக் கல்லுாரி என, மொத்தம், 40 மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி பயில்வதற்கான ஆணைகளை கலெக்டர் துர்கா மூர்த்தி வழங்கினார்.
அப்போது, 'தங்களது உயர்கல்வியை சிறப்பாக பயின்று சமூகத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அந்த துறையில் சிறப்பாக கவனம் செலுத்தி கல்வி பயில வேண்டும். மேலும் உயர்கல்வியோடு, தங்களது தனித் திறமையையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.