/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு பேரவை கூட்டம்
/
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு பேரவை கூட்டம்
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு பேரவை கூட்டம்
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு பேரவை கூட்டம்
ADDED : நவ 01, 2025 01:28 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூன்றாவது சிறப்பு பொதுப்பேரவை கூட்டம், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீமஹாலில் நடந்தது. வங்கியின் மேலாண் இயக்குனர் சந்தானம் வரவேற்றார். இணைப்பதிவாளர் அருளரசு வாழ்த்துரை வழங்கினார்.
நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்து பேசினார். அதில், தற்போது, 30 கிளைகளுடன் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியை, 50 கிளைகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் தலைமையகத்தில் கூட்ட அரங்கம், விருந்தினர் தங்கும் அறை உள்ளிட்ட வசதிகள், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
விரைவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான உரிமம் முழுமையாக வழங்கப்பட்டு விடும். தமிழகத்தில் சிறந்த வங்கியாக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு இணையாக நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முன்னேற்ற பணியாளர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவருமான பொன்னுசாமி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைத்துக்கும் சார்பு சங்கங்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டன.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், நவலடி, நிர்வாக குழு இயக்குனர் மாயவன், சரக துணைப்பதிவாளர்கள் ஜேசுதாஸ், கிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

