/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.பாளையத்தில் 28ல் சிறப்பு கூட்டம்
/
ப.பாளையத்தில் 28ல் சிறப்பு கூட்டம்
ADDED : அக் 26, 2025 12:21 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம், வரும், 28ல் நடக்கிறது என, கமிஷனர் தயாளன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, 21 வார்டு களிலும், வரும், 28 காலை, 11:00 மணிக்கு, நகர்மன்ற உறுப்பினர்கள் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் வார்டு வாரியாக நடக்க உள்ளது. பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுது, பூங்காக்கள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மேற்படி சிறப்பு கூட்டத்தில் எடுத்துரைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

