/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
/
கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
ADDED : ஜன 02, 2025 01:16 AM
நாமக்கல், ஜன. 2-
நாமக்கல் ஆர்.சி., சர்ச்சில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் - துறையூர் சாலையில், கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு, புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்கு தந்தை தாமஸ் மாணிக்கம் தலைமையில் நடந்த பிரார்த்தனையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
* மோகனுார் அடுத்த ஆர்.சி., பேட்டப்பாளையம் புனித செசீலி செபஸ்தியார் ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்போஸ்கோ பால் ஆகியோர் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் மாவட்டம் முழுதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
* நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில், கோட்டை சாலையில் கோட்டை முனியப்பன் சுவாமி கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணியர் கோவில், கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில், அசலதீபேஸ்வரர் கோவில், நாவலடியான் கோவில், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் என, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

