தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


ADDED : ஏப் 04, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் :ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும், 40 நாட்களை, தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில், ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்களின் பாவங்களுக்காக, தன இன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள், மனம் வருந்தி தொடர் பிரார்த்னையில் ஈடுபட்டு, இயேசுவின் பாடுகளை நினைவு கூறுவர்.

அதன்படி, புனித வெள்ளியான நேற்று, கிறிஸ்தவ தேவாலயங்களில், சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. அப்போது, கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும், ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவ தேவாலயத்தில், மும்மணிநேர தியான ஆராதனை நடந்தது.

அதேபோல், மோகனுார் அடுத்த பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செசீலி ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில், சிறப்பு பிரார்த்னை நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த, சிறப்பு ஆராதனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில், இயேசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில், நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அன்று அதிகாலையில், அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us