/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
/
மோகனுார் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஏப் 13, 2025 04:15 AM
மோகனுார்: மோகனுார் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 7ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், கட்டளைதாரர்கள் சார்பில், ஆண்டுதோறும் பவுர்ணமி அன்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு கூழ் ஊற்றுவர்.
அதன்படி, 19ம் ஆண்டு அபிஷேக விழா, நேற்று நடந்தது. ஒரு டன் பூக்களால் கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு பல்வேறு நறு-மண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து, அம்மனுக்கு பூக்களை கொண்டு சிறப்பு அலங்-காரம் செய்யப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, மோகனுார் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

