/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை
/
காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை
ADDED : டிச 29, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், டிச. 29-
சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. தேய்பிறை சனி பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, காசி விஸ்வநாதருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.