sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மீனவ பட்டதாரிகளுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க பிரத்யேக பயிற்சி: கலெக்டர்

/

மீனவ பட்டதாரிகளுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க பிரத்யேக பயிற்சி: கலெக்டர்

மீனவ பட்டதாரிகளுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க பிரத்யேக பயிற்சி: கலெக்டர்

மீனவ பட்டதாரிகளுக்கு போட்டித்தேர்வில் பங்கேற்க பிரத்யேக பயிற்சி: கலெக்டர்


ADDED : நவ 01, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நவ. 1-

தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண் பயிற்சி நிலையம் இணைந்து, ஆண்டுதோறும், 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம் தமிழகரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளாக உள்ள பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவங்களை தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மற்றும் மேட்டூர் அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையத்தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி விவரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூர் அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ, நவ., 5 ஆம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு,'மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், மேட்டூர் அணை பூங்கா, எதிரில், கொளத்துார் சாலை, மேட்டூர் அணை--636 401' என்ற முகவரியில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 04298- 244045 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us