sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஊட்டி மலைப்பாதையில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

ஊட்டி மலைப்பாதையில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஊட்டி மலைப்பாதையில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஊட்டி மலைப்பாதையில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : ஆக 21, 2025 02:37 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஊட்டி மலைப்பாதையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: ஊட்டி மலை ரயில் பாதையில் பயணிப்பது, சுற்றுலா பயணியருக்கு மறக்க முடியாத அனுபவம். அவர்களின் வசதிக்கு விடுமுறை நாட்களில், அப்பாதையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் சிறப்பு ரயில், வரும், 23, 30, செப்., 5, 7, அக்., 2, 4, 17, 19 ஆகிய நாட்களில், காலை, 9:10க்கு புறப்பட்டு, குன்னுார் வழியே மதியம், 2:25க்கு உதகமண்டலத்தை அடையும். மறுமார்க்க ரயில், வரும், 24, 31, செப்., 6, 8, அக்., 3, 5, 18, 20 ஆகிய நாட்களில் காலை, 11:25க்கு கிளம்பி, மாலை, 4:20க்கு மேட்டுப்பாளையத்தை அடையும்.

உதகமண்டலம் - குன்னுார் சிறப்பு ரயில், வரும், 23, 30, செப்., 5, 7, அக்., 2, 4, 17, 19 ஆகிய நாட்களில் மதியம், 2:50க்கு புறப்பட்டு, 3:55க்கு குன்னுாரை அடையும். மறுமார்கக ரயில், வரும், 24, 31, செப்., 6, 8, அக்., 3, 5, 18, 20 ஆகிய நாட்களில் காலை, 9:20க்கு கிளம்பி, 10:45க்கு உதகமண்டலத்தை அடையும். மேலும் மற்றொரு ரயிலாக குன்னுார் - உதகமண்டலம் சிறப்பு ரயில், செப்., 5, 6, 7, அக்., 2, 3, 4, 5, 18, 19 ஆகிய நாட்களில் காலை, 8:20க்கு புறப்பட்டு, 9:40க்கு உதகமண்டலத்தை அடையும். மறுமார்க்க ரயில், செப்., 5, 6, 7, அக்., 2, 3, 4, 5, 18, 19 ஆகிய நாட்களில் மாலை, 4:45க்கு கிளம்பி, 5:55க்கு குன்னுாரை அடையும்.

கோவை - தன்பாத்

கோவை - தன்பாத் சிறப்பு வார ரயில், செப்., 5 முதல், நவ., 28 வரை வெள்ளிதோறும் காலை, 11:50க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா வழியே, ஞாயிறு காலை, 8:30க்கு தன்பாத்தை அடையும். வெள்ளி மதியம், 1:30க்கு ஈரோடு, 2:37க்கு சேலம் வந்து செல்லும்.

மறுமார்க்க ரயில், செப்., 8 முதல்,

டிச., 1 வரை திங்கள் காலை, 6:00 மணிக்கு கிளம்பி, விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே புதன் அதிகாலை, 3:45க்கு கோவை வந்து சேரும். செவ்வாய் இரவு, 11:40க்கு சேலம், நள்ளிரவு, 1:00 மணிக்கு ஈரோடு வந்து செல்லும்.

போத்தனுார் - பரூனி

போத்தனுார் - பரூனி சிறப்பு வார ரயில், செப்., 6 முதல் நவ., 29 வரை சனி காலை, 11:50க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா வழியே, திங்கள் மதியம், 2:30க்கு பீகார் மாநிலம் பரூனியை அடையும். சனி மதியம், 1:30க்கு ஈரோடு, 2:37க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், செப்., 9 முதல், டிச., 2 வரை செவ்வாய் இரவு, 11:45க்கு கிளம்பி, வெள்ளி அதிகாலை, 3:45க்கு போத்தனுாரை அடையும். வியாழன் இரவு, 11:40க்கு சேலம், நள்ளிரவு, 1:00 மணிக்கு ஈரோடு வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே

கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us