/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
/
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
ADDED : அக் 23, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: ஐப்பசி சஷ்டியை முன்னிட்டு, நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை உற்சவ மூர்த்திக்கும், மூலவர் சுவாமிக்கும் சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மோகனுார் காந்தமலை பாலசுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவில் பாலதண்டாயுதபாணி சன்னதியில், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜா அலங்காரத்தில் அருள்பாலித்தார்.