/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செம்மேடு அரசு பள்ளியில் பேச்சு, ஓவிய போட்டி
/
செம்மேடு அரசு பள்ளியில் பேச்சு, ஓவிய போட்டி
ADDED : ஜூலை 16, 2025 01:34 AM
சேந்தமங்கலம், கொல்லிமலை, செம்மேட்டில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆங்கில வழி பயிற்சி நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று, காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மதிவாணன் அனைவரையும் வரவேற்றார். கணிதவியல் பட்டதாரி ஆசிரியை சரிதா, வரலாறு ஆசிரியை சரசு, முதுகலை தமிழ் ஆசிரியை மீனா குமாரி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர், காமராஜர் ஆட்சியில் நடந்த பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினர்.
மேலும், காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளியில் ஓவியம், பேச்சு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.