/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாவை கல்வி நிறுவனத்தில் விளையாட்டு தின விழா
/
பாவை கல்வி நிறுவனத்தில் விளையாட்டு தின விழா
ADDED : மே 11, 2025 01:15 AM
நாமக்கல், நாமக்கல், பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. அதன் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சைபர் செக்யூரிட்டி துறை மாணவர் அஜ்மல் தாஷீன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
சர்வதேச கூடைப்பந்து முன்னாள் வீராங்கனை பிரியதர்சினி பேசுகையில், ''விளையாட்டின் மகத்துவத்தை உணர்ந்து, உங்கள் கல்லுாரி நிர்வாகம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. இதனால்தான் நீங்கள் அண்ணா பல்கலையின், 'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டத்தை தொடர்ந்து, 9 ஆண்டாக வென்றுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்து,'' என்றார்.
தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், பயிற்சியாளர்களுக்கு, கோப்பை, பதக்கங்களை வழங்கினார். இதில், துணைத்தலைவர் மணிசேகரன், செயலர் பழனிவேல், பொருளாளர் ராமகிருஷ்ணன், இணை செயலர் பழனிவேல், இயக்குனர் ராமசாமி, முதன்மை உடற்கல்வி இயக்குனர் சந்தானராஜா, இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், அனைத்து கல்லுாரி முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.