/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளையாட்டு, கல்வியை இரு கண்களாக கருதி செயல்படணும்: எம்.பி.,
/
விளையாட்டு, கல்வியை இரு கண்களாக கருதி செயல்படணும்: எம்.பி.,
விளையாட்டு, கல்வியை இரு கண்களாக கருதி செயல்படணும்: எம்.பி.,
விளையாட்டு, கல்வியை இரு கண்களாக கருதி செயல்படணும்: எம்.பி.,
ADDED : செப் 29, 2024 03:37 AM
நாமக்கல்: ''விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் மாணவ செல்-வங்கள், விளையாட்டு, கல்வியை தங்கள் இரண்டு கண்களாக கருதி செயல்பட வேண்டும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 2,538 வீரர்களுக்கு, 50.76 லட்சம் ரூபாய் பரிசுத்-தொகை மற்றும் பதக்கங்கள் வழங்கி பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்-களுக்கான விளையாட்டு போட்டி, பொதுப்பிரிவினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறானிகளுக்கான விளையாட்டு போட்டி என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டு போட்டிகள், மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட்டன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்க-ளுக்கு, 3 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார். இன்றயை இணையதள உலகில், சமூக வலைதளங்கள் மூலம், இளைஞர்க-ளின கவனம் சிதறடிக்கப்படுகிறது. நம் நேரம் வீணாகிறது. இளைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியம் பாது-காக்கவும் தான் இத்தகைய விளையாட்டு போட்டிகள் நடத்தப்ப-டுகிறது. அரசு பள்ளியில் படிப்பது என்பது சிறுமை அல்ல, நம் பெருமை.
விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் மாணவ செல்-வங்கள், விளையாட்டு மற்றும் கல்வியை தங்கள் இரண்டு கண்க-ளாக கருதி செயல்பட வேண்டும். மாணவர்கள் உயர்கல்வியில் ஆராய்ச்சி படிப்பு வரை பயின்று வாழ்வில் உயர்நிலை அடைய வேண்டும். மேலும், நேற்று முன்தினம், நம் மாவட்ட காவல்து-றையினர், கேரளா மாநிலத்திலிருந்து ஏ.டி.எம்., பணத்தை கொள்-ளையடித்து கன்டெய்னர் லாரி மூலம் தப்பி செல்ல முயன்ற, 7 பேரை மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் வீர தீர செயல்கள் மூலம் கைது செய்துள்ளனர். மாவட்ட காவல்துறையி-னருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி துணை மேயர் பூபதி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கோகிலா, தடகள பயிற்றுனர் கோகிலா, பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.