/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
/
ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
ADDED : ஏப் 13, 2025 04:13 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையத்தில், ராமச்சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்-ளியில், குழந்தைகள் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது.
தாளாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வளர்மதி வரவேற்றார். திருச்செங்கோடு பி.ஆர்.டி., ரிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் ஆர்த்-திபரந்தாமன், குழந்தைகள் உள் விளையாட்டு அரங்கத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி ஆலோசகர் சதீஷ், குழந்தைகளுக்கு விளையாட்டு திறனை
எவ்வாறு மேம்படுத்துவது, அதன் முக்கியத்துவம் குறித்து பெற்-றோர்
களுக்கு எடுத்துரைத்தார்.
மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் சேர்ந்து விளையாட்டு அரங்-கத்தில் விளையாடி மகிழ்ந்தனர். ஆசிரியை தவமணி உள்-ளிட்டோர் வாழ்த்தி பேசினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்-பட்டது.