ADDED : மார் 07, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சத்யா நகரை சேர்ந்தவர்கள் வடிவேல், 35, சுரேஷ், 32; அதே பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ், 28, முருகன், 25. இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சுரேஷ் என்பவர் டூவீலர் இண்டிகேட்டரை, முருகன் உடைத்ததாக தெரிகிறது.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதை மனதில் வைத்துக்கொண்டு மனோஜ், முருகன் இருவரும், பட்டா கத்தியால், வடிவேல், சுரேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். குமாரபாளையம் போலீசார், மனோஜ், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
