/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' 3ல் மங்களபுரத்தில் முகாம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' 3ல் மங்களபுரத்தில் முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' 3ல் மங்களபுரத்தில் முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' 3ல் மங்களபுரத்தில் முகாம்
ADDED : டிச 24, 2025 07:50 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் அரசு மேல்நிலை பள்ளியில், ஜன., 3ல் மாபெரும் மருத்துவ முகாம் நடக்க உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடக்கும் இந்த முகாம், காலை, 7:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் நடக்கும் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை, மருத்துவ துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் செய்துள்ளனர்.
முகாமில், பொது மருத்துவம், இருதய நோய், காது, மூக்கு, தொண்டை, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை, அறுவை சிகிச்சை, ஸ்கேன் பரிசோதனை, கண் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு சிகிச்சை, தோல் நோய், மனநலம், நரம்பியல் மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. 'சிகிச்சைக்கு வரும் பயனாளிகள், 'ஆதார்' அட்டையை கொண்டு வர வேண்டும் என, அதிகாரிகள் தெரி-வித்தனர்.

