/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் 238 முகாம் நடத்த இலக்கு
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் 238 முகாம் நடத்த இலக்கு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் 238 முகாம் நடத்த இலக்கு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் 238 முகாம் நடத்த இலக்கு
ADDED : ஜூலை 03, 2025 01:21 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், மூன்று கட்டமாக முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், தற்போது, நாமக்கல் மாவட்டத்தில், 238 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாம், வரும், 15ல் தொடங்கி, செப்., வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும், 15 அரசு துறைகள் மூலம், 46 வகையான சேவைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.