/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்'திட்ட மருத்துவ முகாம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்'திட்ட மருத்துவ முகாம்
ADDED : செப் 02, 2025 01:17 AM
சேந்தமங்கலம்:கொல்லிமலை யூனியன், வாழவந்திநாடு பஞ்., செம்மேடு அரசு உண்டு உறைவிட பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். முன்னதாக, மாவட்ட சுகாதார அலுவலர் பூங்கொடி வரவேற்று பேசினார்.
அப்போது, பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரை, சான்றிதழ் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதய நோயாளிகளுக்கு இ.சி.ஜி., எக்கோ, வயிறு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை ஆரம்ப சுகாதார நிலைய இணை இயக்குனர் செந்தில் ஆய்வு செய்தார். கொல்லிமலை சுற்றுவட்டார பகுதி மலைவாழ் மக்கள் பயனடைந்தனர். தாசில்தார் சந்திரா, பி.டி.ஓ., ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் நித்தீஸ்வர் நன்றி கூறினார்.