/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மாவட்டத்தில் 238 முகாமுக்கு இலக்கு
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மாவட்டத்தில் 238 முகாமுக்கு இலக்கு
உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மாவட்டத்தில் 238 முகாமுக்கு இலக்கு
உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மாவட்டத்தில் 238 முகாமுக்கு இலக்கு
ADDED : ஜூலை 13, 2025 02:05 AM
நாமக்கல், 'வரும், 15ல் துவங்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாவட்டத்தில், 238 முகாம் நடத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும், 15ல், தமிழக முதல்வரால், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, 238 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கிராம பகுதிகளில் தினமும், மூன்று முகாம்கள், நகர்புற பகுதிகளில், ஆறு உள்பட, அனைத்து பகுதிகளில், வரும், செப்., 30 வரை, 40 நாட்கள், தொடர்ந்து, 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த முகாம்களில், கிராமப்புறங்களில், 15 துறைகளில் சேர்ந்த, 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில், 13 துறைகளை சேர்ந்த, 43 சேவைகளும் வழங்கப்படும். முகாம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள், அரசு துறைகள் மற்றும் அவற்றின் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்து, கடந்த, 8 முதல், 970 தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 2.50 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தில், இதுவரை பயன்பெறாதவர்கள் மீண்டும் மனு செய்யும் வகையில், இந்த முகாம்களில் சிறப்பு பிரிவு அமைக்கப்படுகிறது. ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அளித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு பதிவு செய்யலாம். விண்ணப்பித்த 40 நாட்களுக்குள் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.