ADDED : மே 07, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் இளையவர் சடுகுடு கிளப் சார்பில், 64ம் ஆண்டு தென்னிந்திய ஆண்கள் கபடி போட்டி நாளை தொடங்க உள்ளது.
இரு நாட்கள், பகல், இரவு ஆட்டங்களாக, அரியாகவுண்டம்பட்டி ராமசாமி நினைவு திடலில் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறும், முதல் மூன்று அணிகளுக்கு முறையே, 30,000 ரூபாய், 20,000, 10,000 ரூபாயுடன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீஸ், ரயில்வே, பல்கலை என, 40-க்கும் மேற்பட்ட அணிகள் பதிவு செய்துள்ளன. இதன் ஏற்பாடுகளை, இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை தலைவர் மணி, செயலர் அருள், பொருளாளர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.