ADDED : ஏப் 28, 2024 03:43 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் டவுன் பஞ்.,ல் பார்க்கவன் கைப்பந்து குழு சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவில் கைப்பந்து போட்டி நடந்து வருகிறது. இந்தாண்டு ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி, நேற்று இரவு, 8:00 மணிக்கு தொடங்கியது. இறுதி போட்டி இன்று நடக்கிறது.
போட்டியில், சென்னை, சேலம், திருச்சி, கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் கலந்து கொள்கின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில், ஆத்துார் பெண்கள் அணியும், கோவை பெண்கள் அணியும் மோதின. பெண்கள் அணியினர் லீக் முறையிலும், ஆண்கள் அணி நாக்அவுட் முறையிலும் நடக்கிறது.
தொடக்க விழாவில், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் நல்லதம்பி, பா.ஜ., கைப்பந்து குழு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகன், ஐ.ஜே.கே., வடக்கு மாவட்ட தலைவர் பிரபு உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

