sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாநில சிறுபான்மை ஆணைய குழுவினர் 27ல் நாமக்கல் வருகை

/

மாநில சிறுபான்மை ஆணைய குழுவினர் 27ல் நாமக்கல் வருகை

மாநில சிறுபான்மை ஆணைய குழுவினர் 27ல் நாமக்கல் வருகை

மாநில சிறுபான்மை ஆணைய குழுவினர் 27ல் நாமக்கல் வருகை


ADDED : செப் 19, 2024 07:34 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'மாவட்டத்தில், வரும், 27ல் மாநில சிறுபான்மை ஆணைய குழு-வினர் வருகை தந்து, சிறுபான்மை இன மக்களை சந்தித்து, அவர்-களின் குறைகளை கேட்டறிகின்றனர்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண், துணைத்தலைவர் அப்துல் குத்துாஸ், ஆணையக்குழு உறுப்பினர் செயலர் சம்பத் மற்றும் உறுப்பினர்கள், வரும், 27ல், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை

தருகின்றனர். அன்று காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து

பேசுகின்றனர்.மேலும், சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்-களை கேட்டறியவும் உள்ளனர். சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள்

மற்றும் சிறுபான்மையினத்தை சேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் அனைவரும், மாநில சிறு-பான்மையினர் ஆணையக்குழுவினரை சந்தித்து, தங்களது குறை-களை தெரிவித்து தீர்வு பெறலாம்.மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்-மையினர் நல மேம்பாட்டிற்கான தங்கள் கருத்துக்களையும் தெரி-விக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us