/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில சிலம்ப போட்டி: குறிஞ்சி பள்ளி சாதனை
/
மாநில சிலம்ப போட்டி: குறிஞ்சி பள்ளி சாதனை
ADDED : அக் 13, 2024 08:45 AM
நாமக்கல்: சேலம் எஸ்.ஆர்.எஸ்., ஸ்போர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில், தமிழ்நாடு ஓபன் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதில், குறிஞ்சி பள்ளி மாணவர்கள், 40 பேர் கலந்து கொண்டனர். சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் ஒற்றை கம்பு போட்டியில் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் அருள் சாரதி முதலிடம்; மாணவி ஸ்ருதிகாஸ்ரீ, 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
மேலும், அடி வரிசையில் மாணவன் ஹெத்விக் முதலிடம்; யுவன், 2ம் இடம் பிடித்தனர். குறிஞ்சி
மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிதா, அடி வரிசையில் 2ம் இடமும், மாணவன் ரித்தீஷ் அஸ்வின்
மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். சாதனை புரிந்த மாணவர்களை குறிஞ்சி பள்ளி தாளாளர்
தங்கவேல், தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.