தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாநில சிலம்பாட்ட போட்டி

மாநில சிலம்பாட்ட போட்டி

மாநில சிலம்பாட்ட போட்டி


ADDED : நவ 28, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் - -திருச்செங்கோடு சாலையில் செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியை, தமிழ்நாடு சிலம்பாட்ட சங்க தலைவர் பிரதீப்ராஜூ, தொழிலதிபர் பிரதீப்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாவட்ட சிலம்பாட்ட சங்க தலைவர் ஆதாம்பாரூக், செயலாளர் ரகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 15 முதல், 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் மற்றும் 35 வயதுக்குள்ளான ஓப்பன் பிரிவுகளில், 350 பெண்கள் பங்கேற்றுள்ளனர். நாளை, ஆண்களுக்கான போட்டியில், 650 பேர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கத்தினர் கூறியதாவது:

சிலம்ப கலையையும், அதன் பாரம்பரியத்தையும் பாதுகாத்து கலைஞர்களை ஊக்குவிப்பதே இந்த போட்டியின் நோக்கம். பல்வேறு கவனச்சிதறல்கள் நிறைந்த தற்போதைய சூழலில், இளைஞர்களின் உடல் மற்றும் மன ஒருமைப்பாடு, கவனம், தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றை வளர்க்க சிலம்பம் உதவும். இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us