ADDED : மே 05, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஈ - காட்டூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு வலு துாக்கும் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட வலு துாக்கும் சங்கம் சார்பில், 25வது மாநில அளவிலான சப் ஜூனியர், 41வது மாநில அளவிலான ஜூனியர், 51வது மாநில அளவிலான சீனியர் போட்டிகளை, நேற்று முன்தினம், நாமக்கல் மாவட்ட வலு துாக்கும் சங்க கவுரவு தலைவர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று, மாநில முழுதும் இருந்து ஏராளமான வலு துாக்கும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
முன்றாம் நாளான இன்றும், போட்டிகள் நடக்கின்றன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வலு துாக்கும் சங்க செயலாளர் ராஜா செய்திருந்தார்.