/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாசூரில் மாநில கைப்பந்து போட்டி
/
துாசூரில் மாநில கைப்பந்து போட்டி
ADDED : ஜன 16, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: பொங்கல் பண்டிகையையொட்டி, எருமப்பட்டி அருகே, துாசூரில், 27ம் ஆண்டாக மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் அருணகிரி வரவேற்றார். அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
மின்னொளியில் நடந்த இப்போட்டியில் கலந்தகொள்வதற்காக, சேலம், சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட, 40க்கும் மேற்ப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெற்ற அணிக்கு, 25,000 ரூபாய்; 2ம் பரிசு, 20,000 ரூபாய்; 3ம் பரிசு, 15,000 ரூபாய் என, 6 பரிசுகள் வழங்கப்பட்டன. எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., பொன்னுசாமி உள்ளிட்டோர், பரிசுகளை வழங்கினர்.

