ADDED : செப் 13, 2025 01:57 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினர்களுக்கும் இடையே, கடந்த, 2 நாட்களாக போட்டி நடந்து வருகிறது. இதில், சேலம், ஈரோடு, கோயமுத்துார், கரூர் உள்ளிட்ட மாவடங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
போட்டிகளை கல்லுாரி முதல்வர் ஜோஸ்ப்பின் டெய்சி தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவில், நேற்று இறுதி போட்டி நடந்தது. இதில், கோயமுத்துார் நிர்மலா கல்லுாரி மாணவியர் முதலிடத்தை பிடித்தனர். சேலம் சக்தி கைலாஷ் மாணவியர், இரண்டாம் இடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் அருளப்பன், பழனிச்சாமி ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.