/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கம்பத்திற்கு 'ஒட்டு': மின்வாரியம் அலட்சியம்
/
கம்பத்திற்கு 'ஒட்டு': மின்வாரியம் அலட்சியம்
ADDED : அக் 21, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியம், மின்னக்கல் பஞ்., வடுகம்பாளையம் பகுதியிலிருந்து மல்லுார் செல்லும் சாலையை, ராசிபுரம், சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், கனரக வாகனங்களின் போக்குவரத்தும் இருந்து வருகிறது. இந்நிலையில், சாலையோரத்தில் உள்ள சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றாமல் அவற்றுக்கு, மின்வாரியத்தினர், இரும்பு சட்டம் மூலம், 'ஒட்டு' போட்டுள்ளனர். இரும்பு சட்டம் துருப்பிடித்து கம்பம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. அதனால், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.