/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி ஜரூர்
/
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி ஜரூர்
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி ஜரூர்
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி ஜரூர்
ADDED : மார் 20, 2024 02:02 AM
நாமக்கல்:லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்போட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த, 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி நடந்தது.
தமிழகத்தில், வரும் ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதற்கான அறிவிப்பு, கடந்த, 16ல், வெளியானது. தொடர்ந்து, தேர்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ராசிபுரம் நகராட்சியில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமை வகித்து, 'ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள், எந்த ஒரு ஜாதி, மதம், இனம், வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல், வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்போம்' என்ற உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தலில் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை, பொதுமக்கள், பஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஸ்டிக்கர்களை, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா ஒட்டினார்.
மேலும், தேர்தல் நாள், ஏப்., 19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ரேஷன் கடைகளில் பொது வினியோக பொருட்களின் மீது, தேர்தல் விழிப்புணர்வு, 'ஸ்டிக்கர்' ஒட்டி, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியும், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தேர்தலில் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட இயக்க மேலாண் அலகு மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

