/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., நிர்வாகிகளின் குழந்தைகள் 29 பேருக்கு உதவித்தொகை வழங்கல்
/
தி.மு.க., நிர்வாகிகளின் குழந்தைகள் 29 பேருக்கு உதவித்தொகை வழங்கல்
தி.மு.க., நிர்வாகிகளின் குழந்தைகள் 29 பேருக்கு உதவித்தொகை வழங்கல்
தி.மு.க., நிர்வாகிகளின் குழந்தைகள் 29 பேருக்கு உதவித்தொகை வழங்கல்
ADDED : ஜூலை 15, 2024 01:10 AM
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல், சேந்தமங்கலம், ராசி-புரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, டவுன் பஞ்.,களில், தி.மு.க., நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு கல்வி உத-வித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது.
அவைத்-தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 29 மாணவ, மாணவியருக்கு, 22 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி பேசுகையில், ''தற்போது, 29 பேருக்கு, கல்வி உதவித்-தொகையை வழங்குகிறோம். கடந்தாண்டில், 27 பேருக்கு, ஒரு கோடியே, 65 லட்சத்து, 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கினோம். அடுத்த மாதத்தில், ஒன்றிய, டவுன் பஞ்., செயலா-ளர்கள் மூலம், துணை செயலாளர், பொருளாளர், அவைத்த-லைவர், பி.எல்.ஏ., 2 அதுபோல், மூன்றாண்டுக்கு மேல் கட்-சியில் உறுப்பினராக இருந்தவர்களின் குழந்தைகள், வார்டு அவைத்தலைவர், துணை செயலாளர் என, அனைத்து நிலையில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்-கப்படும்,'' என்றார்.