தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வைக்கோல் விலை சரிவு

வைக்கோல் விலை சரிவு

வைக்கோல் விலை சரிவு


ADDED : ஜன 28, 2025 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியதால், வெளிமாவட்ட வைக்கோல் விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகம் நடக்கிறது. இயந்திரத்தில் கட்டப்பட்ட வைக்கோல் சுமையை லாரியில் கொண்டு வந்து, சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில், ஒரு சுமை, 320 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

கோடையில், கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், விவசாயிகள் வைக்கோலை அதிகம் வாங்கி சேமித்து வைக்கின்றனர். முக்கியமாக, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பின், ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதியில் நெல் அறுவடை தொடங்கிவிட்டது. உள்ளூர் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வைக்கோலை, அருகில் உள்ள விவசாயிகளிடமே வாங்கி வைத்துக்கொண்டனர்.

இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வைக்கோல் விலை குறைந்து, 320 ரூபாய்க்கு விற்ற வைக்கோல் சுமை, தற்போது, 220 ரூபாய் முதல், 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us