/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொது வேலை நிறுத்தம் குறித்து நாமக்கல்லில் தெருமுனை பிரசாரம்
/
பொது வேலை நிறுத்தம் குறித்து நாமக்கல்லில் தெருமுனை பிரசாரம்
பொது வேலை நிறுத்தம் குறித்து நாமக்கல்லில் தெருமுனை பிரசாரம்
பொது வேலை நிறுத்தம் குறித்து நாமக்கல்லில் தெருமுனை பிரசாரம்
ADDED : ஜூன் 06, 2025 01:17 AM
நாமக்கல், பொது வேலை நிறுத்தம் குறித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாமக்கல்லில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9ம் தேதி பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், ப.வேலுார் பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தெருமுனை பிரசாரம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல்-மோகனுார் சாலையில் செயல்படும் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் தொடங்கிய பிரசார பயணம் அண்ணாதுரை சிலை, அரசு போக்குவரத்து கழக பணிமனை, உழவர்சந்தை, நேதாஜி சிலை வழியாக பூங்கா சாலையில் முடிந்தது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் பழனிவேலு, முருகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.