ADDED : ஜூன் 12, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு, சென்னையில் தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'பெட் கேர் பவுண்டேஷன்' நிறுவனத்தின் தொழிலாளர் மூலம் பிடித்து கு.க., செய்யப்படுகிறது.
கடந்த, 7ல் நாய்பிடிக்கும் தொழிலாளர்கள், நான்கு பேர் மூலம் தெரு நாய்கள் பிடிக்கும் பணி துவங்கியது. தொடந்து, ராசாம்பாளையம், கீரம்பூர், கோனுார், சிவியாம்பாளைம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை, 85 நாய்களை பிடித்து, திருநெல்வேலியில் இருந்து வந்த டாக்டர் குழுவினர் மூலம் கு.க., செய்யப்பட்டது.